
அவர்களின் கடைசி நாட்கள் மகிழ்ச்சியாக கழிந்ததா? அவர்கள் ஆசை நிறைவேறியதா? என்பது மீதி கதை. மலையாள ‘ஃபோர் பிரண்ட்ஸ்’, தமிழில் ‘அன்புள்ள கமல்’ ஆகியிருக்கிறது. இதுவரை சொல்லப்படாத கதை என்பதால் படம் கவனம் ஈர்க்கிறது. வெவ்வேறு சூழலில் வாழும் நான்கு பேரையும் சந்திக்க வைக்கிற சுவாரஸ்யமான திரைக்கதை படத்துக்கு பலம். சூர்யா குடும்பத்துக்கு ஜெயராம் பத்து லட்சம் கொடுத்து அதிர்ச்சி அளிப்பது, சிடு சிடு மீரா ஜாஸ்மினை வழிக்கு கொண்டு வரும் குழந்தை, தன் ஹீரோ கமலை, சூர்யா சந்திக்கும்போது வெளிப்படும் சராசரி ரசிகனின் உணர்வு என்று ஆங்காங்கே வரும் சின்ன சின்ன சுவாரஸ்யங்கள் படத்தை சுமந்து செல்கிறது.
No comments:
Post a Comment