HAI FRIENDS PLEASE CLICK THE ADD.

Thursday 31 May 2012

இந்தியாவில் ஆண்டுதோறும் 10 லட்சம் பேர் புகையிலை பழக்கத்தால் இறக்கின்றனர்.

                         தமிழகத்தில் பெருமளவில் பயன்படுத்தப்படும் சிகரெட், பீடி, குட்கா, பான் மசாலா, மூக்கு பொடி, மெல்லும் புகையிலை ஆகியவை மனிதர்களின் உயிர்களை பறிக்கும் பொருட்களாகும். புகையிலை பொருட்களை பயன்படுத்துவதால் உலக அளவில் ஆண்டுதோறும் 60 லட்சம் பேர் உரிய வயதாகும் முன்பே உயிரிழக்கின்றனர். இந்தியாவில் ஆண்டுதோறும் 10 லட்சம் பேர் புகையிலை பழக்கத்தால் இறக்கின்றனர்.

                       புகையிலை பழக்கத்திற்கு அடிமையாகியிருக்கும் இளைஞர்களை அப்பழக்கத்தில் இருந்து மீட்க மத்திய அரசின் உணவு பாதுகாப்பு மற்றும் தரப்படுத்துதல் விதிமுறைகளை பயன்படுத்தி தமிழகத்தில் குட்கா, பான் மசாலா, கைனி உள்ளிட்ட புகையிலை பொருட்களை தடை செய்ய வேண்டும். மக்களின் நலன் காப்பதே அரசின் நோக்கமாக இருக்க வேண்டும்.
 
                     ஆனால் மக்களின் நலன் கருதி புகையிலை பயன்பாட்டை தடுக்க வேண்டிய காவல்துறை, சுகாதாரத்துறை போன்ற அரசுத்துறைகள் மூலமாகவே புகையிலை பொருட்களுக்கு விளம்பரம் செய்யும் அவலம் தமிழகத்தில் நிலவுகிறது.

              
   


                    நேரடியாகவும், மறைமுகமாகவும் அரசுத்துறையினருடன் புகையிலை நிறுவனத்தினர் தொடர்பு கொண்டு விளம்பரம் செய்வதை தமிழக அரசு தடை செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. பெட்ரோல் வரி குடுவதற்கு பதிலாக புகை இலை வரி கூடலாம்

    ReplyDelete