HAI FRIENDS PLEASE CLICK THE ADD.

Thursday, 13 October 2011

விஷால் தூத்துக்குடியில் தாதா.

விபத்தில் பெற்றவர்களை இழந்த விஷாலும் அவரது தங்கை பூனம் கவுரும் அனாதையாகிறார்கள். தங்கையின் வாழ்க்கை நன்றாக அமைய வேண்டும் என்பதற்காக அவரை கிறிஸ்தவ மெஷினரியிடம் ஒப்படைக்கிறார் விஷால். ஆனால் அண்ணன் தன்னை கைவிட்டுவிட்டாரே என தங்கைக்கு கோபம். கண்டிப்பும், கடமையும் மிக்க நேர்மையான போலீஸ் அதிகாரியாகிறார் விஷால். தங்கை கொல்கத்தாவில் கல்லூரியில் படிக்கிறார். போலீஸ் அதிகாரியான விஷால் தூத்துக்குடியில் தாதா ராஜாங்கம் நடத்தும் சாயாஜி ஷிண்டேவின் சாம்ராஜ்யத்தை விரல் விட்டு ஆட்டுகிறார்.

இந்த நேரத்தில் தான் தேடிக் கொண்டிருக்கும் தங்கை கொல்கத்தாவில் இருப்பதை அறிந்து போலீஸ் வேலைக்கு 6 மாதம் லீவு போட்டுவிட்டு அங்கு புறப்படுகிறார். நீ அங்கு போவதற்குள் உன் தங்கையை பரலோகத்திற்கு அனுப்பி விடுவேன் என்று சாயாஜி சவால் விடுகிறார். தங்கையை காப்பாற்ற விஷால் விரைகிறார். அதன் பிறகு கொல்கத்தாவில் நடக்கும் ஆக்ஷன் சர‘வெடிÕதான் மீதிப் படம். விஷால் மீண்டும் ஆக்ஷன் அவதாரம் எடுத்திருக்கிறார். “போலீஸ் வேலையில எல்லாத்தையும் கத்துக்கிட்டேன். கத்துக்காத ஒரே விஷயம் பயம்.

பயம்னா என்னன்னே தெரியாது என்ற பஞ்ச் டயலாக்கோடு எதிரிகளை துவம்சம் செய்கிறார். அறிமுக காட்சியிலேயே தன்னை வழிமறிக்கும் வில்லனுக்கு கொடுக்கும் பீர்பாட்டில் வைத்தியத்திலிருந்து ஆரம்பிக்கிறது அதிரடி. போலீஸ் சீருடையில் வரும்போது இருக்கும் அதே கம்பீரம் அவர் மப்டியில் வரும்போதும் இருப்பதுதான் விஷால் ஸ்பெஷல். தவறாக புரிந்து கொண்ட தங்கையை நினைத்து மனதுக்குளேயே அழுவது என சென்டிமென்ட் ஏரியாவிலும் நின்று விளை
யாடுகிறார்.

சமீரா ரெட்டி ஆறடி உயர அழகு தேவதை. வெளியில் தெனாவெட்டு பார்ட்டியாகவும், வீட்டுக்குள் குடும்ப குத்துவிளக்காகவும் நடித்து படத்தின் கலர்புல் ஏரியாக்களை கவனித்துக் கொள்கிறார். இல்லாத செவன் பேக்ஸை இருப்பதாக காட்டிக் கொள்ள விவேக் செய்யும் பலூன் காமெடி, நான் ஸ்டாப் லூட்டி. சமீரா ரெட்டிக்காக விஷாலை எதிர்க்க ஹீரோ பில்டப் கொடுப்பதும், அவரை ஒரே ஒரு குண்டூசியால் விஷால் மிரள வைப்பதும் கல கல. சாயாஜி ஷிண்டேவும் அவரது மகனும் தாதாக்கள் வேலையை கச்சிதமாக செய்கிறார்கள். ஒரு நாள் பயத்தில் சாயாஜி ஆடிப்போகும் காட்சியில் முத்திரை பதிக்கிறார்.

விஷாலின் தங்கையாக நடித்திருக்கும் பூனம் கவுருக்கு ஹீரோயின் அழகு இருக்கிறது. கிளைமாக்ஸில் அண்ணனை புரிந்து கொண்டு. “அண்ணா வாழ்ந்தா ரெண்டு பேரும் சேர்ந்து வாழ்வோம். செத்தா இரண்டு பேரும் சேர்ந்தே சாவோம். எதுன்னு இப்பவே முடிவு பண்ணுÕÕ என்று கூறும்போது நடிப்பில் மிளிர்கிறார். ஆர்.டி.ராஜசேகரின் ஒளிப்பதிவில் பாடல் காட்சிகளில் குளிரும் சண்டை காட்சிகளில் அனலும் வீசுகிறது. விஜய் ஆண்டனி யின் இசையில் பாடல்கள் காதுக்குள் ரீங்காரமிடுகிறது. அனைத்துவித பொழுதுபோக்கு அம்சங்களுடன் வெடி மூலம் ரசிகர்களுக்கு விருந்து படைத்திருக்கிறார் இயக்கு னர் பிரபுதேவா.

No comments:

Post a Comment