HAI FRIENDS PLEASE CLICK THE ADD.

Sunday 23 October 2011

தனி நீதிமன்றத்தில் மீண்டும் ஜெயலலிதா..........


பெங்களூர் தனி நீதிமன்றத்தில் மீண்டும் நவ. 8ம் தேதி ஜெயலலிதா ஆஜராவாரா?


              மீண்டும் நவம்பர் 8ம் தேதி, பெங்களூர் தனி நீதிமன்றத்தில் முதல்வர் ஜெயலலிதா ஆஜராவது பற்றி, உச்ச நீதிமன்ற உத்தரவை பொறுத்தே முடிவு செய்யப்படும் என்று அவரது வக்கீல் பி.குமார் தெரிவித்தார். பெங்களூரில் அவர் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: உச்ச நீதிமன்ற உத்தரவை ஏற்று தமிழக முதல்வர் ஜெயலலிதா, பெங்களூர் தனி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி, நீதிபதி கேட்ட கேள்விகளுக்கு கடந்த 2 நாட்களாக பதில் அளித்தார். பிராசிகியூஷன் தரப்பில் வைத்த கேள்விகளுக்கு தெளிவாகவும், சரியாகவும், பதற்றம் இல்லாமலும் பதில் அளித்தார்.    
அவரை 2 நாட்கள் மட்டுமே உச்ச நீதிமன்றம் விசாரிக்க உத்தரவிட்டிருந்தது. அந்த நாட்கள் முடிந்து விட்டது. ஆனால், நீதிபதி இன்னும் கேள்விகள் கேட்க வேண்டியிருப்பதால், மறு விசாரணையை நவம்பர் 8ம் தேதிக்கு ஒத்திவைத்திருக்கிறார். தனி நீதிமன்ற நீதிபதியின் உத்தரவை அடுத்து, நாங்கள் உச்ச நீதிமன்றத்தை நாட உள்ளோம். மீதியுள்ள கேள்விகளை மாற்று வழியில், அதாவது வீடியோ கான்பரன்சிங் முறையில் கேட்பதற்கு, அனுமதி கேட்டு மனு தாக்கல் செய்வோம். அந்த மனுவை ஏற்று உச்ச நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவை பொறுத்து, மீண்டும் நவம்பர் 8ம் தேதி, பெங்களூர் தனி நீதிமன்றத்தில் ஜெயலலிதா ஆஜராவது குறித்து முடிவு செய்யப்படும்.........

No comments:

Post a Comment