HAI FRIENDS PLEASE CLICK THE ADD.

Monday 17 October 2011

உயிருக்கு குறி..... நந்தா


கூலித்தொழிலாளி ஜி.எம். குமார் மகன் நந்தா. கஷ்டப்பட்டு படித்து ஐ.பி.எஸ். ஆகிறார். பயிற்சி முடிந்து வேலூர் மாவட்ட போலீஸ் உதவி கமிஷனர் பதவி ஏற்கிறார். ஆக்கிரமிப்பு அகற்றல், ரவுடிகள் ஒழிப்பு, நில அபகரிப்பு மீட்பு என அதிரடி செய்கிறார். மக்கள் கொண்டாடுகிறார்கள். மந்திரி தயவுடன் சமூக விரோத காரியங்கள் செய்யும் தாதா அழகம் பெருமாள், தொழில் நந்தாவால் நசிகிறது. மேலதிகாரிகளை ஏவி மிரட்டுகிறார். பொய் சாட்சிகள் வைத்து நந்தா போடும் வழக்குகளை தவிடு பொடி யாக்குகிறார்.
 
நகரில் மீண்டும் ரவுடிசம் தலை தூக்குகிறது. அவற்றை தடுக்க இயலாது உடைகிறார். நந்தா உயிருக்கும் குறி வைக்கப்படுகிறது. அதில் இருந்து மீண்டு தாதா கூட்டத்தை ஒழித்தாரா? என்பது கிளைமாக்ஸ்... வழக்கமான போலீஸ் கதையில் இருந்து வித்தியாசப்பட்டுள்ள படம். அழுத்தமான திரைக்கதையில் காட்சிகளை விறு விறுப்பாக நகர்த்துகிறார் இயக்குனர் ஆர்.என்.ஆர். மனோகர். நேர்மையான போலீஸ் அதிகாரியாக நந்தா மிடுக்கு காட்டுகிறார். போலீஸ் கான்ஸ்டபிள் சல்யூட்டில் லயிப்பது... சமூக விரோதிகளுடன் தொடர்பு வைத்து குறுக்கீடு செய்யும் உயர் போலீஸ் அதிகாரிகளை கண்டு பொருமுவது... அவமானங்களை மனைவியிடம் சொல்லி அழுவது... என நேர்த்தியாய் உணர்வுகளை கொட்டி ஈர்க்கிறார்.
 
 தாதா நெட்வெர்க்கை சரிக்கும் பிற்பகுதி கதை விறு விறுப்பு. பூர்ணா அழகை தெளிக்கிறார். பஸ்சுக்குள் நந்தாவுடனான அவரது அறிமுகம் கலகலப்பு... தந்தை-மகனாக வரும் சிங்கமுத்து, சந்தானம் காமெடி ஏரியாகளை கட்ட வைக்கிறது. தவறுதலாக விலை மாதுவை சந்தானத்துக்கு மணப்பெண்ணாக நிச்சயம் செய்வதும் அவரிடம் மனம் விட்டு பேசும்போது, நிஜம் தெரிந்து அதிர்வதும் உச்சக் கட்ட தமாஷ்... அழகம் பெருமாள் வில்லத்தனத்தில் மிரட்டுகிறார். ஆசை நாயகி வீட்டில் போலீசை காவலுக்கு வைத்து செய்யும் அட்டூழியம் குரூரம்... வில்லன்களுடன் தந்திரமாக மோதி வீழ்த்தும் பிற்பகுதி சீன்களில் இன்னும் விறுவிறுப்பு ஏற்றி இருக்கலாம்.
 
மந்திரியுடன் கூட்டு வைத்துள்ள தாதா சாம்ராஜ்ஜியத்தை வீழ்த்த மேலதிகாரியிடம் ஒரே நாளில் நந்தா அனுமதி பெறுவதும் ஒட்டவில்லை. சுந்தர் .சி. பாபுவின் இசையில் பாடல்கள் இதம். வெற்றியின் ஒளிப்பதிவு, மொத்த வேலூரையும் அள்ளி தெளிக்கிறது.

No comments:

Post a Comment