HAI FRIENDS PLEASE CLICK THE ADD.

Tuesday 15 November 2011

15 அடி உயரம் பறந்த தாதா!

 குமரி மாவட்டத்தில் புதுக்கடை, கருங்கல், பைங்குளம், விளாத்துறை, பாலப்பள்ளம், நல்லூர் உள்பட 17 பேரூராட்சி பகுதிகளுக்கு குழித்துறை கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ், குடிநீர் வினியோகம் நடந்து வருகிறது. தனியார் நிறுவனம் இந்த பணிகளை முடித்து குடிநீர் சப்ளை செய்து வருகிறது. ஒரு வருட பரிசோதனை முறையில் தனியார் நிறுவன மேற்பார்வையில் தான், குடிநீர் வினியோகம் நடக்கிறது. அவ்வப்போது குடிநீர் குழாய்களில் உடைப்புகள் ஏற்பட்டு அவற்றை சரி செய்து வருகின்றனர். 

இதற்காக   காப்புக்காடு & ஐரேணிபுரம் சாலையில் சுமார் 8அடி ஆழத்தில் ராட்சத குழாய்கள் பதிக்கப்பட்டு இருக்கின்றன. இந்த ராட்சத குழாய் பகுதிகளில் திடீர், திடீரென உடைப்புகள் ஏற்பட்டு சாலையை பிளந்து கொண்டு தண்ணீர் பனை உயரத்துக்கு கூட வெளியேறும். 

இந்த நிலையில் நேற்று காலை மார்த்தாண்டம் சானல்முக்கு பகுதியை சேர்ந்த ஆமோஸ்(65) என்பவர், கள்ளித்தட்டு பகுதியில் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென அந்த ராட்சத குழாயில் உடைப்பு ஏற்பட்டு சாலையை பிளந்து கொண்டு தண்ணீர் வெளியேறியது. பீறிட்டு வெளியேறிய தண்ணீர் 15 அடி உயரத்துக்கு ஆமோசை தூக்கி வீசியது. இதில் அவருக்கு முகம்  மற்றும் தலையின் பின்புறத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. அதிர்ச்சியடைந்த மக்கள் காயம் அடைந்த ஆமோசை குழித்துறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


labels: மார்த்தாண்டம்,பரிசோதனை 

No comments:

Post a Comment