HAI FRIENDS PLEASE CLICK THE ADD.

Saturday 12 November 2011

ரஜினியின் பெயரை பயன்படுத்திய ‘கான்’ நடிகர்!!!!


 டாப் ஹீரோக்கள் என்று சொல்லப்படும் ‘கான்’ நடிகர்கள் ரஜினியின் பெயரை பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது.

ஷாருக் கான் நடித்த ‘ரா ஒன்’ படத்தில் முக்கிய காட்சியில் ரஜினி நடிக்கிறார் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் அதற்கு முதலில் ரஜினி தரப்பிலிருந்து மறுப்பு வந்தது. 

இதுதொடர்பாக ஷாருக்கானிடம் ரஜினியின் 2வது மகள் சவுந்தர்யா பேசினார். இதில் சமரசம் ஏற்பட்டது. ஒருநாளில் சில மணி நேரம் மட்டுமே ரஜினி நடித்து தர சம்மதித்தார். 

அந்த காட்சி, சில நொடிகள் மட்டுமே படத்தில் இடம் பெற்றது. ஆனால் இது கிராபிக்ஸில் வடிவமைக்கப்பட்ட காட்சி என்ற மாற்றுக் கருத்தும் கிளம்பியுள்ளது. 

’’ஆமிர்கானுடன் ரஜினி நடிப்பதாக கூறப்படுவதில் உண்மை இல்லை. அப்படி எந்த விளம்பர படத்தில் நடிக்கவும் அவர் இதுவரை ஒப்புக்கொள்ளவில்லை.

விளம்பரத்துக்காகவும், பரபரப்புக்காகவும் ரஜினியின் பெயரை பிரபலங்கள் பயன்படுத்திக் கொள்வதை இத்துடன் நிறுத்திக் கொள்ள வேண்டும்’’ என்று கூறியுள்ளார்.


labels:rajni.amirkhan,சவுந்தர்யா, 

No comments:

Post a Comment