HAI FRIENDS PLEASE CLICK THE ADD.

Monday 28 November 2011

3 பைகளில் 2 பையை மட்டும் தப்பியது.


கடையின் அலமாரியில் இருந்த தங்க செயின்கள், தங்க மாலைகள் என 500 பவுன் நகைகள் கொள்ளையடிக்ப்பட்டது தெரிய வந்ததது. இதன் மதிப்பு ரூ. 1 கோடி ஆகும். கடையின் பூட்டுகள் மாறி உள்ளதால் கள்ளச்சாவி போட்டு மர்ம நபர்கள் நகையை கொள்ளையடித்து உள்ளனர்.
கடையில் 18 ஊழியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். அவர்களிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். சின்னக்கடை வீதியில் ஏராளமான நகை கடைகள் உள்ளது. இந்த வீதி எப்போதும் ஆட்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும் பகுதி ஆகும். மேலும் கொள்ளை போன கடையின் அருகே போலீஸ் பூத் உள்ளது. இங்கு சுழலும் கண்காணிப்பு காமிரா பொருத்தப்பட்டு உள்ளது. இங்கு கொள்ளையர்கள் கைவரிசை காட்டி இருப்பது மற்ற நகை கடை உரிமையாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கொள்ளை நடந்த கடை அருகே கோட்டை காவல் நிலையம்
திருச்சியில் கொள்ளை நடந்த அமர் ஜுவல்லர்ஸ் இருக்கும் சின்னக்கடை வீதியில் மேலும் மிகப்பெரிய நகை கடைகளும், வர்த்தக நிறுவனங்களும் உள்ளது. இங்கிருந்து 10 கடைகள் தள்ளிதான் கோட்டை போலீஸ் நிலையம் உள்ளது. இங்கு இரவு நேரத்தில் போலீசார் ரோந்து வருவார்கள். இதனையும் மீறி கொள்ளையர்கள் துணிகர செயலில் ஈடுபட்டு இருப்பது வியாபாரிகள் இடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.
நகை பையை விட்டு சென்ற கொள்ளையர்
அமர் ஜுவல்லரியில் பல ரேக்குகள் உள்ளது. இந்த ரேக்குகளில் உள்ள நகையை கொள்ளையர்கள் 3 பைகளில் அள்ளி போட்டு உள்ளனர். ஆட்கள் வரும் சத்தம் கேட்டதால் 2 பையை மட்டும் எடுத்து கொண்டு தப்பி உள்ளனர். ஒரு பையை விட்டு சென்றதால் அதில் இருந்த 100 பவுன் நகை தப்பி உள்ளது.


labels:நகை,ஜுவல்லரி,போலீசார். 

No comments:

Post a Comment