HAI FRIENDS PLEASE CLICK THE ADD.

Tuesday 29 November 2011

பஸ் ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு.......


51-ல் இருந்து 58 சதவீதமாக பஸ் ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு: ஜெயலலிதா அறிவிப்பு
மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான அக விலைப்படியை மாநில அரசு ஊழியர்களுக்கு வழங்கும் வகையில், மாநில அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோருக்கான அகவிலைப்படியை 51 விழுக்காட்டில் இருந்து 58 விழுக்காடாக 1.7.2011 முதல் உயர்த்தி வழங்கவும், அதற்கான நிலுவைத் தொகையை ரொக்கமாக வழங்கவும் கடந்த அக்டோபர் மாதம் நான் ஆணையிட்டேன்.
 
இதேபோன்று, தமிழ்நாட்டில் இயங்கி வரும் எட்டு அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியும் அலுவலர்கள், தொழில்நுட்பப் பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் ஆகியோருக்கு வழங்கப்பட்டு வரும் அகவிலைப்படியையும், 51 சதவீதத்தில் இருந்து 58 சதவீதமாக 1.7.2011 முதல் உயர்த்தி வழங்க நான் தற்போது ஆணையிட்டுள்ளேன்.
 
இந்த உயர்த்தப்பட்ட அகவிலைப்படி நிலுவையின்றி ரொக்கமாக 1.7.2011 முதல் வழங்கப்படும். இந்த அகவிலைப்படி உயர்வு காரணமாக, அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு கூடுதலாக மாதம் ஒன்றுக்கு 9 கோடியே 15 லட்சம் ரூபாய் செலவாகும்.
 
இந்த அகவிலைப்படி உயர்வின் மூலம், போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியும் 1 லட்சத்து 19 ஆயிரத்து 261 அலுவலர்கள், பணியாளர்கள், தொழிலாளர்கள் பயன் பெறுவர். தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இந்த அகவிலைப்படி உயர்வு, அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றும் பணியாளர்களும், தொழிலாளர்களும் மேன்மேலும் ஊக்கத்துடனும், உற்சாகத்துடனும் கடமையாற்ற வழிவகை செய்யும் என்று நம்புகிறேன்.
 labels:jeyalalitha,

No comments:

Post a Comment