HAI FRIENDS PLEASE CLICK THE ADD.

Saturday 5 November 2011

ரஜினியின் விழிப்புணர்வு படம் இது!


 மக்கள் மத்தியில் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த மத்திய அரசின் சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளது.

இதற்காக விளம்பரபடங்கள் தயாரிக்கப்பட உள்ளன. இந்த விளம்பர படத்தில் நடிக்கவும் விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபடவும் நடிகர்கள் ரஜினிகாந்த், அமீர்கான் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இதற்கான ஒப்பந்தத்தில் அவர்கள் கையெழுத்திட்டு உள்ளார்கள். நாடு முழுவதும் ரஜினி, அமீர்கான் உருவப்படங்களுடன் ஊட்டச்சத்து விழிப்புணர்வு விளம்பர பேனர்கள் வைக்கப்பட உள்ளன.

இது சம்பந்தமாக பல்வேறு மாநிலங்களில் நடைபெறும் கருத்தரங்குகள் பிரசாரக்கூட்டங்களிலும் இருவரும் பங்கேற்று பேச உள்ளனர். ஏற்கனவே ரஜினி போலியோ தடுப்பு விழிப்புணர்வு பிரசார விளம்பர படத்தில் நடித்துள்ளார். அந்த படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது.


labels:ரஜினிகாந்த், அமீர்கான், 
சுகாதாரத்துறை.

No comments:

Post a Comment