HAI FRIENDS PLEASE CLICK THE ADD.

Wednesday 2 November 2011

நூறு ஆண்டுகளுக்கு ஒருமுறை...பிரசவம்..

 நூறு ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் 11&11&11ம் தேதியில் நடிகை ஐஸ்வர்யா ராய் பிரசவம் நடைபெறும் என்று மும்பையில் பரபரப்பாக பேசப்படுகிறது.
முன்னாள் உலக அழகியும் பிரபல பாலிவுட் நடிகையுமான ஐஸ்வர்யா ராய் நிறைமாத கர்ப்பமாக உள்ளார். அவருக்கு இந்த மாதம் 10 முதல் 15ம் தேதிக்குள் பிரசவம் ஆகலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த 10 ஆண்டுக்கும் மேலாக இந்தியா மட்டுமின்றி உலக அளவில் பிரபலமாக இருக்கும் ஐஸ்வர்யா ராய் & அபிஷேக் பச்சனுக்கு குழந்தை பிறக்கப் போவதை அனைவரும் ஆவலாக எதிர்நோக்கியுள்ளனர்.

இந்த நிலையில், நூறு ஆண்டுகளில் ஒருமுறை மட்டும் வரக்கூடிய தேதியாக 11&11&11 அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை வருகிறது. ஐஸ்வர்யா ராய் பிரசவத்துக்கான தேதிகளில் 11&11&11 இருப்பதால், அன்றைய தினத்தில் குழந்தை பிறந்தால் சிறப்பாக இருக்கும் என்று அமிதாப் குடும்பத்தினர் கருதுவதாக மும்பையில் தகவல் பரவியது. ஐஸ்வர்யா ராயின் பிரசவத்துக்காக 10ம் தேதி முதல் 15ம் தேதி வரை மும்பை மோரல் பகுதியின் செவன் ஸ்டார் சிறப்பு மருத்துவமனையில் சொகுசு அறை முன்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அங்கு ஐஸ்வர்யா ராய் 10ம் தேதி அட்மிட் ஆவார் என்றும் அவரை சிறப்பு மருத்துவர்கள் கண்காணித்து பிரசவம் பார்க்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.




labels: ஐஸ்வர்யா ராய், மும்பை,seven star,அபிஷேக், அமிதாப்.

No comments:

Post a Comment