HAI FRIENDS PLEASE CLICK THE ADD.

Saturday 5 November 2011

மனைவி நடத்தையால் சந்தேகப்பட்டு, கணவன் கொடூரம்?


அந்த பகுதியில் உள்ள பொது கிணற்றில் கடந்த 2 தினங்களாக சேதுராமன் மண்எண்ணெய், பெனாயில் ஆகியவற்றை ஊற்றியதை பொதுமக்கள் பார்த்தனர்.

எதற்காக இதை கிணற்றில் கொட்டுகின்றாய்?'' என்று அந்த பகுதி மக்கள் அவரிடம் கேட்டனர். அதற்கு அவர், கிணற்றில் கழிவுகளைப் போட்டேன். துர்நாற்றம் வீசாமல் இருக்க ஊற்றினேன்'' என்றார்.

இதற்கிடையே அங்கு துர்நாற்றம் அதிகமாக வீசுவதைக் கண்ட பொதுமக்கள் கிணற்றின் மேல் இருந்த மூடியை அகற்றி பார்த்தனர். அப்போது 4 பாலிதீன் பைகள் கிணற்றில் கிடந்தது தெரிய வந்தது.

உடனே இதுபற்றி போலீசுக்கு தகவல் அளித்தனர். பரங்கிமலை துணை கமிஷனர் அஸ்வின் கோட்னிஸ், உதவி கமிஷனர்கள் முருகேசன், விஜயகுமார், நந்தம்பாக்கம் போலீஸ் 
கமிஷனர் ஆனந்தராஜ் ஆகியோர் அங்கு விரைந்து சென்றனர்.

கிணற்றில் மிதந்த 4 பைகளை வெளியே எடுத்து பார்த்தபோது ஒரு பெண்ணின் கால்கள், உடல் பாகங்கள், கைகள் இருந்தன.

தனது மனைவி ஜெயாவை கொலை செய்து துண்டு துண்டாக வெட்டி பாலிதீன் பையில் போட்டு கிணற்றில் சேதுராமன் வீசி இருக்கலாம் என போலீசார் சந்தேகப்பட்டனர். சேதுராமனை தேடி சென்றபோது வீட்டை பூட்டிக் கொண்டு தப்பி சென்று விட்டார்.

அவருடைய மகள் லோகேஸ்வரி பரங்கிமலையில் உள்ள பள்ளியில் 10 ம் வகுப்பும், இன்னொரு மகள் இலக்கியா 8 ம் வகுப்பும் படித்து வருகின்றனர். தனிப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் பள்ளிக்கூடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்.

அப்போது சேதுராமனின் மகள்கள் போலீஸ் இன்ஸ்பெக்டரிடம்,   எங்களுடைய தந்தை பகலில் பள்ளிக்கூடத்திற்கு வந்து,  நான் ஊருக்கு செல்கிறேன். 2 நாளில் வந்து விடுவேன்' என்று கூறி சென்றார்'' என்று தெரிவித்தனர்

மனைவி நடத்தையால் சந்தேகப்பட்டு அவளை சேதுராமன் கொடூரமாக கொலை செய்து பாலிதீன் பைகளில் உடல் உறுப்புகளைப் போட்டு கற்களை கட்டி கிணற்றில் போட்டு இருக்கிறார். ஜெயாவை கொலை செய்து விட்டு கடந்த 27 ந் தேதி முதல் எதுவும் நடக்காததுபோல அந்த பகுதியில் சேதுராமன் நடமாடி இருக்கிறார்.

மேலும் கிணற்றில் கிடக்கும் தலையை எடுக்க தண்ணீரை அகற்ற வேண்டும் என்று தீயணைப்பு துறையினருக்கு போலீசார் அழைப்பு விடுத்தனர். அவர்கள் வராததால் போலீசார் மோட்டார் பம்ப் மூலம் தண்ணீரை வெளியேற்றி தலையை தேடும் பணியில் ஈடுபட்டனர். இரவு 7 மணி வரை கிணற்றில் இருந்து தண்ணீர் வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர். மேலும் தப்பி ஓடிய சேதுராமனை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.


labels:கமிஷனர், கமிஷனர், 


No comments:

Post a Comment