HAI FRIENDS PLEASE CLICK THE ADD.

Tuesday 8 November 2011

ஏழைகளுக்கு உதவிய கமல்


நடிகர் கமல்ஹாசனின் 58-வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது நற்பணி இயக்கம் சார்பாக தமிழகம் முழுவதும் ஏராளமான நல உதவிகள் வழங்கப்பட்டன.
 கமல்ஹாசனின் பிறந்த நாளான (நவ.7) திங்கள்கிழமை, அனைத்து மாவட்டங்களிலும் அவரது ரசிகர்கள் ரத்த தானம் வழங்கினர்.
 ஏழை மாணவ, மாணவியருக்கு நோட்டு புத்தகங்கள் மற்றும் கல்வி உதவித்தொகை, ஆதரவற்ற முதியோர்களுக்கு உணவு, வேஷ்டி, சேலைகள், குழந்தைகள் காப்பகங்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்கள், ஆசிரமங்களுக்கு ஒரு மாதத்துக்குத் தேவையான உணவுப் பொருள்கள், தையல் இயந்திரங்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனங்கள் உள்ளிட்ட நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகளை கமல் நற்பணி இயக்கம் ஏற்பாடு செய்திருந்தது.
 சென்னை ராயபுரத்தைச் சேர்ந்த 7 ரசிகர்கள், தங்கள் மறைவுக்குப் பிறகு உடல் தானம் செய்வதற்கான உறுதி மொழிப் பத்திரத்தில் கையெழுத்திட்டனர். "களத்தூர் கண்ணம்மா' படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமான கமல்ஹாசன் - தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, ஒரிசா, வங்காளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் சுமார் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். திரையுலகில் 50 ஆண்டுகளுக்கும் அதிகமாக நடித்து வருகிறார்.
 நடிப்புத்துறையில் மட்டுமல்லாமல் நடனக் கலைஞர், பாடகர், பாடலாசிரியர், கதாசிரியர், இயக்குநர், தயாரிப்பாளர் என திரையுலகின் பல்வேறு பிரிவுகளிலும் சிறப்பான பங்களிப்பாற்றியவர். மாநில விருதுகள், பிலிம் ஃபேர் விருதுகள், மூன்று முறை தேசிய விருதுகள் பெற்று தமிழ் சினிமாவுக்கும் இந்திய சினிமாவுக்கும் பெருமை சேர்த்தவர். இந்தியாவிலிருந்து இதுவரை 7 முறை ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்ட ஒரே நடிகர் கமல்ஹாசன் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

labels:kamal,hindi,kannadam,

No comments:

Post a Comment