HAI FRIENDS PLEASE CLICK THE ADD.

Tuesday 1 November 2011

நில ஒதுக்கீட்டில் ஏற்பட்ட தகராறு,,,மெட்ரோ ரயில்!!!

நடிகரும், அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ஐசரி வேலனின் மகனான ஐசரி கணேஷ் பச்சையப்பன் அறக்கட்டளையின் தலைவராக கடந்த ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் தலைவர் பதவியை அவர் ராஜிநாமா செய்துவிட்டார்.
இந்நிலையில் மெட்ரோ ரயில் திட்டத்துக்கு பச்சையப்பன் கல்லூரியின் 3 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டதற்கு அறக்கட்டளையின் சில உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மெட்ரோ ரயில் திட்டத்துக்கு தேவையான 32 சென்ட் நிலம் மட்டுமே ஒதுக்கப்பட வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது.
மெட்ரோ ரயில் திட்டத்துக்கு தேவையில்லாமல் 3 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டதற்கு ஐசரி கணேஷ்தான் காரணம் என அவர்கள் குற்றம்சாட்டினராம். இப் பிரச்னை குறித்து முடிவு எடுப்பதற்காக அறக்கட்டளையின் நிர்வாகக் குழு கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றதாம். மெட்ரோ ரயில் திட்டத்துக்கு நிலம் ஒதுக்கப்பட்டது தொடர்பாக பேசும்போதுதான் உறுப்பினர் சிவசுப்பிரமணியனை ஐசரி கணேஷ், சரவணன், மோகன் ஆகியோர் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
மாநிலக் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர் சிவசுப்பிரமணியன்.

No comments:

Post a Comment